மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!!
ஆவின் பொருட்களின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல்,பதப்படுத்துதல்,குளிரூட்டுதல், மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் லிட்டர் பாலை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
மேலும் விற்பனை செய்யப்பட்ட பால் தவிர மீதமுள்ள பாலை மதிப்புகூட்டல் மூலம் ஆவின் மையங்களில் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்சி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன், பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, டீ-காபி, பேவர்டு மில்க், மில்க்ஷேக், வே டிரிங் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களாக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.
ஆவின் பால் பொருட்களின் விலையானது ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. ரூ.450 க்கு விற்கப் பட்ட ஒரு கிலோ பன்னீர் தற்போது ரூ.550 ஆக உயர்ந்துள்ளது.
- பன்னீர் 1 கி.கி – ரூ.550
- பன்னீர் 1/2 கி.கி – ரூ. 300
- பாதாம் மிக்ஸ் 200 கிராம் – ரூ.120