தமிழகம் முழுவதும் சேதம் அடைந்த குடியிருப்புகளை இடிக்க வல்லுனர் குழு ஆலோசனை!

Photo of author

By Vijay

தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதனை விரைந்து இடிக்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்புகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 22271 குடியிருப்புகளில் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது.

இதில், சுமார் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. அவற்றை உடனடியாக இடித்து சீரமைக்க வேண்டுமென தொழில்நுட்ப வல்லுநர் குழு, நகர்புற மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.