தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சென்ற மாதம் 35 ஆயிரத்திற்கும் மேல் இருந்த தினசரி பாதிப்புகள் தற்சமயம் 9 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.இந்த நோய் தொற்று பாதிப்பினால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அதோடு பல தொழில் நிறுவனங்களும் பலத்த நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது நடைபாதை வியாபாரிகள், டீக்கடை, பெட்டிக்கடை மற்றும் சிறு குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூலித் தொழிலாளிகள் என்று அனைத்து தரப்பினரும் இந்த நோய்த் தொற்று பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடுமையாக, பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதோடு இந்த நோய்த்தொற்று காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்லாமல் உலக அளவில் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. அவற்றை மீட்டெடுக்கும் வழிகள் என்னவென்று தெரியாமல் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் தவித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் ஆயிரம் நபர்களுக்கு கோவை மாவட்டத்தில் மட்டும் நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல மற்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே தான் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நோய்தொற்று நிவாரணமாக தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஊதியம் இல்லாத அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு உதவித்தொகை என்று பாலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவிதத்தில் அறநிலையத் துறை சார்பாக கோவில்களில் உணவு சமைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நடைமுறையை தற்சமயம் 11 மாவட்டங்களில் இருந்து வருகிறது. குறைவான அளவுகளில் தளர்வுகள் இருந்து வருகின்றன. இந்தநிலையில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் உள்பட பலருக்கு ஊரடங்கு முடிவுக்கு வரும் 21ஆம் தேதி வரையில் உணவு வழங்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.