பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம்

Photo of author

By Anand

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம்

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை விரிவாக்கம் செய்ய பணி நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது.

அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் , ஆழியார் அணையிலிருந்து 64 கி.மீ தூரத்தில் உள்ளது.

மேலும், வழிகளில் ரோடு குறுகலாக உள்ளதால் வளைவுகளில் வாகனங்கள் ஓட்டுவதற்கு பயணிகள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி பாதுகாப்பில்லாமல் உள்ளது. அடிக்கடி அப்பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படுகிறது.

மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்படும் நேரங்களில் ஆழியாறில் இருந்து வால்பாறை செல்ல குறுகலான ரோடுகளை ஒருவழிப்பாதைகளாக அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு பயணங்களை மேற்கொள்வதால் பயண நேரம் அதிகரிக்கப்படுகிறது. ஆகையால் ரோடுகளை விரிவு செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கை அளிக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பாதையில் எஸ் வளைவு வரும் இடங்கள் மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் ஆகிய இடங்களின் வளைவுகளை குறைத்து ஒரே நேர் ரோடாக அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனைத் தொடர்ந்து அடிவாரத்தில் துவங்கி மலை உச்சி வரை ஆங்காங்கே 5 மீட்டர் அகலமுள்ள ரோட்டை 7 மீட்டராக விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஏரியல் லைடர் அளவீடு எனப்படும் ‘வான்வழி லைடர் அளவீடு’ முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கருவியை வானில் பறக்க விட்டு மலைப்பாதையின் நீளம்,அகலம், உயரம் அளவிடப்படுகிறது.இம்மாத இறுதிக்குள் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்த பின் அதற்கேற்ற நிதியைப் பெற்று சாலை விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.