crop insurance:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் காப்பீடு தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
விவசாயிகள் விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்வதன் மூலம் அறிவிக்கப்பட்ட பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அத்தகு காரணங்களாக பயிர் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி ,வெள்ளம், புயல் , சூறாவளி, பூச்சி தாக்குதல் முதலியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு தொகையை ஏக்கருக்கு ரூ.36500 வழங்கப்படுகிறது. இதற்கு மாதம் ரூ 750 ரூபாய் ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் 56.80 கோடிக்கும் மேலான விவசாயிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கிராம நிர்வாக அலுவரிடம் விண்ணப்பம் பெற வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் விண்ணப்பத்துடன் அடங்கல் சான்று, வங்கி கணக்கு எண் , ஆதார் அட்டை மற்றும் பயிர் செய்துள்ள விவசாய நிலம் இருக்கும் கிராமம் ,அதில் விவசாய நிலம் எண் , பரப்பு பற்றிய தகவல்கள் கொடுக்க வேண்டும்.
விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள செப்டம்பர் 15 முதல் நவம்பர் 15 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற விடுமுறை நாட்கள் அதிகம் வந்ததால், பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள கால அவகாசம் வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.