பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.பொதுத்தேர்வானது அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.மே மாதத்தில் அதற்கான முடிவுகளும் வெளிவந்தது.மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வந்தனர்.இதனிடையே கோடை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது.
அதேபோல என்றும் இல்லாத அளவிற்கு இம்முறை கோடை வெயிலானது சுட்டெரித்தது.இந்த வெயிலின் தாக்கத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அதிகளவில் பாதிப்படைந்தனர்.பல உயிரிழப்புகளும் உண்டானது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது பொதுத்தேர்வு விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இந்த வேளையில் மீண்டும் வெயிலானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இதனிடையே நேற்று பீகாரில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்களின் கோரிக்கையை ஏற்று தற்பொழுது தமிழக அரசானது மாணவர்களுக்கு கூடுதல் விடுப்பு அளித்துள்ளது. அதன்படி வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் பத்தாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பள்ளி திறப்பு தேதியை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.