இந்த நான்கு நகரங்களில் தீவிர கட்டுப்பாடு! அதிகரித்த கொரோனா பாதிப்பு!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.தொற்று பதிப்பானது முதலில் அதிகரித்து இருந்தது.இதற்கான தடுப்பு வழிமுறைகள் நடைமுறை படுத்தியவுடன் தொற்று பாதிப்புக்கள் கணிசமாக குறைந்து வந்தது. அதுமட்டுமின்றி தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டது மக்கள் அனைவரும் அதனைச் செலுத்திக்கொண்டனர். இருப்பினும் பலர் தடுப்பூசி போடாமலும் இருந்தனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே முக்கிய இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.அதனையடுத்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் போட்டுக்கொண்டனர்.
தற்பொழுது மூன்று அலைகள் கடந்து விட்டது. நான்காவது அலை ஆகஸ்ட் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அந்த வகையில் தற்போது மும்பையில் நான்காவது அலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் என்சாய் 50க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிப்பாகியுள்ளனர். குறிப்பாக மும்பை தானே நாசிக் ஆகிய நகரங்களில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு நாளில் தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு உள்ளது என்பதை சராசரியாக 8,000 பேருக்கு பரிசோதனை செய்யும்படி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தற்பொழுது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் சோதனை செய்யும் எண்ணிக்கையை எட்டாயிரத்து லிருந்து 30 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. எப்பொழுதும் சோதனை செய்த பிறகு அதன் முடிவுகளை சோதனை செய்த நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக அவரவர் செல்போனுக்கு அனுப்பப்படும். ஆனால் இம்முறை அதனை தவிர்த்துள்ளனர். சோதனை செய்தவர்களின் முடிவுகளை முதலில் மாநகராட்சிக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.