தமிழகத்தில் பல ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகளே மாறி மாறி ஆள்வதால் புதிதாக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. அதிலும் திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது அவர்கள் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை உடைக்கும் விதமாக பல்வேறு செயல்முறைகள் இருந்து வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, லாக்கப் மரணம் என அனைத்தும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக மின்சார கட்டணம் வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது பார்த்து பொறுக்க முடியாமல் தான் பொதுமக்கள் மாற்று கட்சியினர் வரவேண்டும் என்று எண்ணி உள்ளனர். அந்த வகையில் சமயம் பார்த்து விஜய் நுழைந்துள்ளார்.
இது பெரும்பாலானோரின் வாக்கானது அவர் பக்கம் சாய்ந்துள்ளது. அதேபோல ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இவரது அரசியல் கொள்கை இருந்தது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு எனக் கூறியுள்ளதால் திமுக அதிமுகவின் இணை கட்சிகள் அனைவரும் மாறுதலுக்கு வேண்டி தயாராகிவிட்டனர்.
இந்த வேலையில் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக முடித்த விஜய் தற்பொழுது தனது இரண்டாவது மாநாட்டை திமுகவின் கோட்டையில் நடத்த உள்ளார். இது முழுக்க முழுக்க திமுகவின் ஆதரவை சிதைக்க வேண்டும் என்ற திட்டத்தால் தான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த வகையில் திமுக இத்தனை ஆண்டு காலம் சம்பாதித்து வைத்த அனைத்து பவரையும் விஜய் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசுகின்றனர்.
இந்த இரண்டாவது மாநில மாநாடானது விஜய்க்கு வெற்றிகரமாக முடிந்து விட்டால் வாக்கு வங்கியில் பெருத்த மாற்றம் வரும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. இதில் திமுக தனது பவரை தக்கவைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.