அசாம் மாநிலத்தை காவு வாங்கிய வெள்ளப்பெருக்கு?அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ?
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக் கனமழையால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.மேலும் அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்நடைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பிராணிகள் அனைத்தும் வெள்ளம் ஏற்பட்ட நீரால் அடித்துச் செல்லப்பட்டது.
வாகனங்கள் செல்லும் வழியில் அங்காங்கே மரங்கள் உடைந்து சாலையில் கிடந்துள்ளன.வெள்ளநீர் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவைகளும் முடக்கப்பட்டது.வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு வாழும் பறவைகள் மற்றும் விலங்குகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. அங்கு வாழும் மக்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளம் நீரால் அடித்துச் செல்லப்படுகிறது.
மேலும் மின்கம்பங்கள் சாலை நடுவே சரிந்து கிடந்தது. இதனால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்பதற்காக போராடி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் அசாம் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 30 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட காரணமாக 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளால் அமைக்கப்பட்டுள்ள 759 நிவாரண முகாம்களில் 2.84 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைமைகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகலால் வழங்கப்பட்டு வருகிறது.