வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை நிரம்பி வரும் நீர்நிலைகள்! எப்படி எதிர்கொள்ளப் போகிறது தமிழக அரசு?

Photo of author

By Sakthi

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஓடு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆகவே அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் மழை குறித்த நடவடிக்கைகள் தொடர்பாகவும், நிவாரண பணிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியாளர்களுடன் நேற்றைய தினம் காணொலிக் காட்சியின் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்து வருகிறது இந்த நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு அதன் மூலமாக தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.

ஏற்கனவே பெய்த மழையினால் உண்டான வேதங்களையே இன்னும் சரிவர ஆளுங்கட்சியினர் கவனிக்கவில்லை, சரியான முன்னேற்பாடுகள் இல்லை, என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி கொண்டிருக்க தற்சமயம் மீண்டும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஆளும் கட்சியான திமுக அதற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள்.

அதோடு தற்சமயம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் தமிழகம் 2015ஆம் ஆண்டில் சந்தித்த ஒரு நிலையை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.

அதோடு கர்நாடகத்தில் மழை பெய்து வந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டது இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி விட்டது, அதன்படி தற்சமயம் மேட்டூர் அணைக்கு சுமார் 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே மேட்டூர் அணை தன்னுடைய முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விட்ட காரணத்தால் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மேலும் ஒகேனக்கல் பகுதியில் கனமழை பெய்து வருவதால் அங்கும் நீர் வருகை அதிகமாக இருக்கிறது, இதனால் மேலும் தமிழகத்திற்கு மழையால் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை எதிர்க்கட்சியாக இருந்த திமுக மழைக்காலங்களில் ஏரிகளை சரியாக கவனிக்கவில்லை என்று விமர்சனம் செய்தது. அப்படி ஒரு நிலை இருக்க தற்சமயம் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக இதுபோன்ற சிக்கல்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது.