கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

0
210

கோடைகாலத்தில், வெயிலின் தாக்கத்தால் நான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். அதில் ஒன்று கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்.

கோடைக்காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். எனவே நாம் அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்த வேண்டும்.

வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனின் வெப்ப கதிர்கள் நம் சருமத்தை மட்டுமல்லாது நமது கண்ணையும் பாதிக்கிறது.

முதலாவதாக கண் வறட்சி. கண்களில் உள்ள நீர்படலம் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை கோடைக்காலங்களில் மட்டுமல்ல எல்லா பருவ காலங்களிலும் ஏற்படும். கண் வறட்சி உள்ளபோது கண் எரிச்சல், மற்றும் அரிப்பு போன்றவை உண்டாகும்.

மேலும் இதற்கு அதிக அளவு தண்ணீரை அருந்தி, வெயிலின் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் போது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.

அடுத்ததாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய். இது ஒரு வித பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றாகும். இதனால் கண் சிவந்து போதல், கண் அரிப்பு, கண்களில் நீர் வடிதல் போன்றவை இருக்கும். இது ஒருவரிடத்தில் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

இதை தவிர்க்க கண்களை தொடாமல் இருக்க வேண்டும். கண்களில் நீர் வடியும் போது டிஸ்யூ அல்லது சுத்தமான காட்டன் துணிகளை கொண்டு துடைக்க வேண்டும்.

 

அடுத்து, கண்கட்டிகள். இது கண் இமைகளுக்கு மேலே அல்லது கீழே உண்டாகும். இதுவும் ஒரு பாக்டீரியா தொற்றாகும். இது வெளியே வெயிலில் சுற்றுபவர்களுக்கு வரும். இது மிகுந்த வலியையும், எரிச்சலையும் உண்டாக்கும்.

இத்தகைய கண் பிரச்சினைகள் வெப்பம், மாசு, தூசி, வேறொருவரின் மூலம் பரவுதல் ஆகியவையே காரணம்.

 

இதை தடுக்க, முடிந்த வரை வெயிலில் வெளியில் செல்வதை தடுக்கலாம். வெளியில் செல்லும் கட்டாயம் ஏற்பட்டால் குளிர் கண்ணாடி அணிந்து செல்லலாம். கண்களை அடிக்கடி தொடாமல் இருக்கலாம். உடல் வெப்பமாவதை தடுக்க தண்ணீரை அதிக அளவு எடுத்து கொள்ள வேண்டும். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து உள்ளவைகளை எடுத்து கொள்ள வேண்டும்.

கண்களில் பாதிப்பு ஏற்பட்டால், நீங்களாக வைத்தியம் செய்து கொள்ளதீர்கள். கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்.

Previous article10 நாட்களில் 10 கிலோ எடை குறைக்கலாம்..
Next articleவீட்டில் உள்ள இந்த பொருட்கள் மட்டுமே போதும்! இனி ஆயுசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி இருக்காது!