பன்றி தோல் மூலம் கண் பார்வை! இந்தியா மற்றும் ஈரான் ஆய்வில் வெற்றி!
கார்னியா எனப்படும் கருவிழி படலம் சேதம் அடைந்தால் மனிதர்களுக்கு கண் பார்வை இழக்கப்படும். அவ்வாறு உலகம் முழுவதும் ஒன்றரை கோடி பேர் பார்வையிழந்து பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிலருக்கு இறந்தவர்களின் கருவிழி படலம் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் கருவிழிப் படலம் மற்றும் அறுவை சிகிச்சை புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் மனித கருவிழி படலாம் கொலாஜான் எனும் புரதத்தைக் கொண்டு இருக்கிறது எனவும் தெரியவந்தது. மேலும் அதனால் பன்றி தோலில் இருந்து பெறப்பட்ட கொலாஜான் மூலக்கூறுகளை பயன்படுத்தி மனிதர்களுக்கு பொருத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் இந்தியாவை சேர்ந்த எட்டு பேரும் ஈரான் நாட்டை சேர்ந்த 12 பேரும் கருவிழி படலம் பொருத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை கிடைத்துள்ளது.
மேலும் கருவிழி படலாம் மாற்று அறுவை சிகிச்சை செய்து இரண்டு ஆண்களுக்கும் பிறகு அவர்களுக்கு அனைவரும் தற்போது பார்வை பெற்றுள்ளனர். மேலும் இரண்டு ஆண்டு ஆய்வில் அவர்களுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படாமல் கண் பார்வை கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த ஆய்வில் வெற்றி அடைந்தது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் பன்றி தோல் மூலம் கருவிழி படலத்தை மாற்றுவது என்பது செலவு குறைந்தது தான் மேலும் இது தொடர்பாக பல ஆய்வுகளை செய்யப்பட்ட பின்னரே மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பாக உறுதியான முடிவு வெளியிடப்படும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.