Beauty Tips: முகத்தில் உள்ள முகப்பருக்கள் கரும்புள்ளி தழும்புகள் மறைய..  கொத்தமல்லி ஃபேஸ் பேக்!

0
120
Face acne, dark spots and scars disappear.. Coriander face pack!
Face acne, dark spots and scars disappear.. Coriander face pack!

நம்முடைய முகத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவை இருக்கும். இதை அனைத்தையும் ஒரே மருந்தில் சரி செய்ய முடியாமல் முகப்பருக்களை மறைய வைக்க ஒரு மருந்தும் தழும்புகளை மறைய வைக்க ஒரு.

மருத்தும் கரும்புள்ளிகளை மறையச் செய்ய ஒரு மருந்தும் என்று பலவிதமான மருந்துகளை முகத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இதனால் நம்முடைய முகத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என்றால் அது சந்தேகம் தான்.  எனவே இந்த மூன்று பிரச்சனைகளையும் தீர்க்க கொத்தமல்லி ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம்.

கொத்த மல்லி இலைகளில் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின். சி சத்து சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி அதன் மூலமாக சருமத்தில் உள்ள சேதங்களை சரி செய்கின்றது.

கொத்தமல்லி இலைகளில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின் சத்து வைட்டமின் ஏ ஆக மாறுகின்றது. இந்த வைட்டமின் ஏ சத்து நம்முடைய சருமத்தில் உள்ள சுருக்கங்களை மறையச் செய்கின்றது. மேலும் கொத்தமல்லியில் உள்ள ஆன்டி பாக்டீரியல் சத்துக்கள் நம்முடலய சருமத்தில் உள்ள துளைகள் மற்றும் சுருக்கங்கள் மறையச் செய்கின்றது. இத்தனை சத்துக்கள் கொண்ட கொத்தமல்லி இலையில்  பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* கொத்தமல்லி இலைகள்

* ஆப்பிள் சீடர் வினிகர்

* குளிர்ந்த பால்

* தேன்

* ரோஸ் வாட்டர்

செய்முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொத்த மல்லி இலைகள் கொதித்த பின்னர் இதை ஆற வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு காற்றுபுகாத பாட்டில் ஒன்றை எடுத்து அதில் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினாயகர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டி வைத்துள்ள கொத்தமல்லி தலைகளை வேகவைத்த தண்ணீரை அந்த காற்று புகாத பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்து அதில்ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கொத்தமல்லி இலையின் நீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு தேன். சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ கொத்தமல்லி பேஸ் பேக் தயார்.

இதை முகத்தில் தேய்ப்பதற்கு முன்னர் ஒரு பருத்தி பஞ்சை எடுத்து குளிர்ந்த பாலில் தொட்டு பஞ்சை பிளிந்து விட்டு பின்னர் முகத்தில் தேய்க்க வேண்டும். அதன் பின்னர் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும். பின்னர் முகத்தை துடைத்து விட்டு நாமா தயார். செய்து வைத்துள்ள கொத்தமல்லி ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்யலாம்.

கொத்தமல்லி பேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்தி பின்னர் அரை மணி நேரம் கழிந்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவி விட்டு பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதையடுத்து மற்றொரு பஞ்சை எடுத்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து முகம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வதால் முகத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும். அதன் பின்னர் முகத்திற்கு மாய்சுரைசரை பயன்படுத்தலாம்.