பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

Photo of author

By Parthipan K

பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

2004ம் ஆண்டு நண்பர்களால் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக். அந்த நிறுவனம் அசுர வளர்ச்சியடையும் என அதை நிறுவியவர்களிடம் கூறியிருந்தால் கூட அவர்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள். உலக அளவில் கிட்டத்தட்ட சுமார் 2.5 பில்லியின் பயனர்களை பேஸ்புக் தற்போது கொண்டுள்ளது.

இதனால் பயனர்கள் பதிவிடும் பதிவுகளை தனிக்கை செய்ய பேஸ்புக் பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இவர்கள் கொலை, வன்முறை, பாலியல் பலாத்காரம் ஆகிய செய்திகள், படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போது மனநலப் பாதிப்புக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிப்புக்குள்ளான பணியாளர் ஒருவர் கலிஃபோர்னியா நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் இந்த பணியை மேற்கொண்டவர்கள், மேற்கொள்பவர்கள் என சுமார் 11 ஆயிரத்து 250 பேருக்கு 52 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் சுமார் 392 கோடி ரூபாய்க்கு சமம்.

இதனால் ஒவ்வொருவருக்கும் 75ஆயிரம் ரூபாய் முதல் நாலரை லட்ச ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கவும் பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.