FACIAL HAIR: பெண்களே முகத்தில் வளரும் முடிகளை அகற்ற ஷேவிங் செய்ய வேண்டாம்!! இந்த க்ரீம் அப்ளை செய்யுங்கள் போதும்!!
ஆண்களுக்கு முகத்தில் முடி இருந்தால் அவை அழகை கூட்டும்.அதுவே பெண்களுக்கு முகத்தில் முடி இருந்தால் அவை அழகை கெடுக்கும்.காது ஓரங்களில்,கன்னத்தில்,உதட்டிற்கு மேல் அதிகளவு முடி வளரும்.இந்த முடிகளை அகற்ற க்ரீம்,ஷேவிங்,வேக்ஸிங் ஆகியவற்றை பயன்படுத்தினாலும் அவை தற்காலிகமாக தான் நீங்கும்.இந்த முறையில் முடிகளை அகற்றினால் அவை இன்னும் அதிகமாகத் தான் வளரும்.
முகத்தில் முகத்தில் அதிகளவு முடி இருந்தால் அவை நம்மை கேலி கிண்டலுக்கு ஆளாகி விடும்.எனவே முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ஒரு மாதங்களுக்கு செய்து வரவும்.
1)பார்லி பவுடர்
2)பால்
இரண்டு தேக்கரண்டி பார்லி அரிசியை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் இந்த பொடியை போட்டு காய்ச்சாத பால் 5 தேக்கரண்டி சேர்த்து கலக்கவும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நிரந்தரமாக நீங்கி விடும்.
1)அரிசி மாவு
2)எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து வாஷ் செய்யவும்.இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முடிகளை எளிதில் அகற்றி விட முடியும்.
1)கற்றாழை ஜெல்
2)மஞ்சள் தூள்
3)எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்,ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து வாஷ் செய்யவும்.இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முடிகளை எளிதில் அகற்றி விட முடியும்.