நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தமிழகத்தை அதிகளவு பாதித்து.தமிழகத்தை மேற்கொண்டு பாதிக்காமலிருக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அச்சமையம் மக்கள் நலன் கருதி பல நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வந்தது.அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ.4000 நிவாரண நிதி,12 இலவச மளிகை பொருட்களை தமிழகரசு வழங்கியது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறியதாவது,கொரோனா நிதியாக தமிழக அரசு கூறிய அனைத்து சலுகைகளும் இந்த இரண்டு மாதங்களாக வழங்கி வந்தனர்.அவ்வாறு வழங்கிய நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு மே 16,ஜூன்4,11 ஆகிய தேதிகள் விடுமுறையாக தமிழக அரசு கூறியிருந்தது.ஆனால் அதிகப்படியான நிவாரண நிதிகள் கொடுக்க இருந்த காரணத்தினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து வந்தனர்.
தற்போது நிவாரண பொருட்கள் அனைத்தும் கொடுத்து முடித்த நிலையில் அவர்களுக்கான விடுப்பு தற்பொழுது அளிக்கப்பட்டுள்ளது.அதனால் ஜூலை 17,24 மற்றும் ஆகஸ்ட் 14 ஆகிய நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த நியாய விலைக்கடைகளும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.அதனால் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் விடுமுறை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் படியும் கூறியுள்ளனர்.