இதிலும் போலி ஆவணங்களா? அதிர்ச்சி அடைந்த போலீசார்!

0
119
Fake documents in this too? Shocked cops!
Fake documents in this too? Shocked cops!

இதிலும் போலி ஆவணங்களா? அதிர்ச்சி அடைந்த போலீசார்!

கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திலும், பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து உத்தரகாண்ட் வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் போலி ஆவணங்கள் மற்றும் போலி சான்றிதழ்களை பயன்படுத்தி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து மாநில எல்லைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் சோதனையை போலீசார் தீவிர படுத்தினர். இந்நிலையில் உத்தரகாண்டின் டேராடுன் சுற்றுலாத் தலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் போலிஸார் இந்த சோதனை மேற்கொண்டனர். அப்போது 13 சுற்றுலா பயணிகள் போலி சான்றிதழ் மற்றும் போலி ஆவணங்களை வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு போலி சான்றிதழ் மற்றும் ஆவணங்களை தயாரித்து கொடுத்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். உத்தரகாண்டில், இதுவரை 100 சுற்றுலா பயணிகள் போலி சான்றிதழ்களை வைத்துள்ளனர். அதனால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஊஞ்சல் ஆடியதால் ஏற்பட்ட விபத்து! பதைபதைத்த நிமிடங்கள்!
Next articleகோலியின் எச்சரிக்கையை மீறிய முக்கிய வீரர்!