சாலை விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் தரும் ஷாக் ட்ரீட்மெண்ட்

0
118

பொம்மை டிராபிக் போலீஸ்: வாகன ஓட்டிகளை குழப்பிய காவல்துறை

சாலையின் நடுவில் ட்ராபிக் போலீஸ் போல் பொம்மைகளை நிறுத்திவைத்து பெங்களூர் காவல்துறையினர் வாகன ஓட்டிகளை குழப்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பெங்களூரில் உள்ள ஒரு சில முக்கிய சாலைகளில் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் போலவே பொம்மைகளை பெங்களூர் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த பொம்மைகளை பார்த்து உண்மையான காவல்துறை அதிகாரிகள் என நினைது விதிகளை மீறி சொல்வோர் பயப்படுவதாகவும், காரில் செல்பவர்கள் கூட இந்த பொம்மைகளை பார்த்து சீட் பெல்ட்டை மாட்டிக் கொள்வதும் செல்போன் பேசியதை துண்டிக்கவும் செய்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இருப்பினும் ஒரு சில நாட்களில் இது பொம்மை என்று வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வார்கள் என்றும் எனவே அடுத்த கட்டமாக பொம்மைகளில் கேமரா வைக்கவும், விதிகளை மீறி செல்வோர் குறித்த வீடியோ பதிவை வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டம் உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்

மேலும் வாரம் ஒருநாள் பொம்மை நிற்கும் இடத்தில் உண்மையான காவல்துறை அதிகாரியை நிறுத்திவைக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொம்மை என நினைத்து சாலை விதிகளை மீறுபவர்களை மடக்க இந்த திட்டம் என்றும் காவல்துறையினர் கூறி வருகின்றனர்

இதனால் சாலையில் இருப்பது பொம்மையா? அல்லது உண்மையான போலீஸ்காரரா?என்ற குழப்பம் வாகன ஓட்டிகளுக்கு தொடரும் என்பதால் விதிகளை மீற பயப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Previous articleவிண்ணில் பாய்ந்தது கார்டோஸாட் 3
Next articleஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!