அரசியலில் வீழ்ச்சி அடைந்தவர்!! இப்பொழுது திரையுலகில் உயர்வை அடைந்து வருகிறார்!!

Photo of author

By Gayathri

அரசியலில் வீழ்ச்சி அடைந்தவர்!! இப்பொழுது திரையுலகில் உயர்வை அடைந்து வருகிறார்!!

Gayathri

Fallen in politics!! Now he is getting high in the film industry!!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது சிறுவயதில் இருந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சில காலங்களாக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அரசியல் பாதை இவருக்கு தோல்வியிலேயே முடிந்தது என்றும் கூறலாம். எனவே இவர் மீண்டும் திரையுலகில் தனது வெற்றி பாதையை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவ்வாறு சினிமா துறையில் மீண்டும் நுழைந்த கமலஹாசன் முதலில் விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

மேலும் இவர் கடந்த ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் சினிமாவில் பிஸியாக இருப்பதால் இந்த முறை பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமா துறையில் நடிப்பில் மட்டும் என்று தன்னுடைய புரொடக்ஷன் மூலம் படங்களையும் எடுத்து கொள்கிறார். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்த அமரன் படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை பெற்றுள்ளது.

அதேபோல் 2025-ம் கமலின் கேரியரில் முக்கியமான ஆண்டாக அமைய இருக்கிறது. ஏனென்றால் இந்தியன் 3 படு பயங்கரமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. என்பவையெல்லாம் கமலினுடைய அடுத்த அடுத்த வளர்ச்சி படிகளாக அமைந்துள்ளன என்றும் கூறலாம்.