சரிந்து வரும் ஆபரண தங்கம் விலை!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Photo of author

By Jeevitha

Gold News: இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கம் விலை குறைந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில தினங்களாக சரிவை நோக்கி செல்கிறது. இதனால் மக்கள், தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதால் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதனை தொடர்ந்து 14.11.2024-இன்றும் ஆபரண தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது ஒரு சவரன் ரூ.55,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை மட்டுமல்லாமல் வெள்ளியும் ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.59,000-த்தை தாண்டி விற்பனை செய்து, வரலாறு காணாத உச்சத்தை பெற்றது.

இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி தங்கம் விலையானது ரூ.55 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கடந்த 12 ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.1,080 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. 13 ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.