24 கேரட் தங்கத்தில் பர்கர் செய்து அசத்திய கொலம்பியா!

பழங்கால உணவுகளை விட ஜங்க் ஃபுட்டில் அனைவரும் அதிக அளவு ஈடுபாடு காட்டி வருகின்றனர். வயதுவரம்பு பாராமல் ஜங்க் ஃபுட் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர்.

ருசியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இந்த ஜங்க் ஃபுட்டில் பீட்சா,பர்கர், சாண்ட்விச் போன்ற பல வகை உணவுகள் உள்ளன. சத்துள்ள பல உணவுகளை விட இந்த உணவுகளின் மீது மக்கள் ஆர்வம் காட்டி எவ்வளவு விலையாக இருப்பினும் வாங்கி உண்கின்றனர்.மேலும் கண்ணை கவரும் வகையில் இந்த உணவுகள் உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில் கொலம்பியாவில் உள்ள “டோரோ மெக்கோய்” என்ற உணவகத்தில் 24 கேரட் தங்கத்தால் பர்கரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.மேலும் இதை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கி உண்கின்றனர்.

இதற்கு “ஓரோ மெக்கோய்” என்ற பெயர் வைத்த உணவகம் இந்த பர்கரை 24 கேரட் தங்கத்தில் நனைத்து இறைச்சி மற்றும் சீஸ் உடன் பரிமாறுகிறது.கேட்டதற்கே நாவில் எச்சில் ஊற வைத்த இந்த பர்கரின் விலையை கேட்டால் நம்மில் பலருக்கும் இதயத்துடிப்பு நின்று விடும்போல் இருக்கும்.

எவ்வளவுனு கேக்குறீங்களா நம் நாட்டின் பணத்திற்கு ஒப்பிட்டுக்கூறினால் 57 டாலர் அதாவது 4191 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பர்கரை சாப்பிடுறதுக்கு ஒரு மாச வேலைக்கு போக வேண்டி இருக்குமே என்பது நம்மில் பலருக்கும் எழுந்த எண்ணமாக கூட இருக்கும்.

மேலும் இந்த உணவகத்தில் சாதாரண ஒரு பர்கரின் விலை 11 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.807 ஆக உள்ளது.

Leave a Comment