67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

Photo of author

By Hasini

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

Hasini

False love at the age of 67! Husband who broke wife's waist!

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

கள்ள காதலினால் தினம் ஒரு கொலை சம்பவம் நாம் நாட்டில் நடந்தேறி வருகிறது.ஒருவருக்கு தேவைப்படும் செயலை செய்ய கூடாது என கூறும் போது அது விபரீதத்தில் போய் முடிகிறது.

67 வயதான கிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஒலக்கூர் கிராமத்தில் தனது மனைவி சாரதாம்பாளுடன், ஒலக்கூர் ரயில்வே பீட்டர் சாலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த 19-ம் தேதி இரவு, தனது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் தனது மனைவி சாரதாம்பாளை அருவாமனையால் வெட்டி கொலை செய்து, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுபற்றி ஓலக்கூர் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப் பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாரதாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து அவரது மகன் மற்றும் மகளிடம் விசாரணை மேற்கொள்ளபட்டது.அவர்களுக்கு ஒன்றும் தெரியாத நிலையில், அதே ஊரில் பதுங்கி இருந்த சாரதாம்பாளின் கணவனான கிருஷ்ணன் பிடி பட்டார்.

அதை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார்.கடந்த 10 வருடங்களுக்கு முன் பக்கத்துக்கு ஊரில் ஒரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் தனக்கும் தன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் கூறினார்.

கடந்த 17 ம் தேதியும் அதே போல் சாரதாம்பாளுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது எனவும், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிருஷ்ணன் சாரதாம்பாளின் இடுப்பை உடைத்தார்.

மேலும் அவர்களுக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ணன் வீட்டிலிருந்த அரிவாள்மனையால் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவானதும், என அனைத்தையும் கூறினார்.

இதற்கும் இவர் தலைமை ஆசிரியராக வேற பணியாற்றினாராம்.இவரே இப்படி நடந்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.