மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்!

Photo of author

By Hasini

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்!

கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்ள ஒரு நாற்பத்தி மூன்று வயது பெண்ணுக்கு  திடீரென கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட கள்ளக் காதலின் காரணமாக, குடும்பத்தை விட்டுவிட்டு அந்த கல்லூரி மாணவனுடன் சென்று திருச்சியில் தனியாக குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு உள்ளனர்.

நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 43 வயதான பெண் திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகள் மற்றும் மகனுடன் குடும்பமாக வசித்து வந்தனர். மகள் கல்லூரி படிப்பு படித்து வருகிறார். மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதும், வெளியே போய் வருவதும் என நாளடைவில் பழக்க வழக்கங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் அரசல்புரசலாக இருவரின் வீட்டுக்கும் தெரியவந்தது. இதனை அடுத்து இருவரின் வீட்டிலும் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளனர்.

அதன் காரணமாக அவர்கள் இருவரும் சந்திக்க முடியாமல் போனது. பிரித்து வைத்தால் ஆர்வம் அதிகமாக தானே ஆகும். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த இரண்டு நபர்களும் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அந்த இரு நபர்களின் வீட்டின் குடும்பத்தினரும் எங்கு தேடியும் இரண்டு பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து இரண்டு வீட்டாரும் தனித்தனியாக போலீஸ் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் போலீசாரால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கள்ளக்காதலர்கள் இரண்டு பேரும் திருச்சியில் வசித்து வந்தது போலீசுக்கு தெரியவந்தது. அந்த கள்ள காதலர்கள் இரண்டு பேரும் வீட்டில் இருந்து கிளம்பி நேராக திருச்சி சென்றுள்ளனர்.

மேலும் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.கல்லூரி மாணவன் தினமும் வேலைக்கு சென்று பணம் கொண்டு வருவதும், அதை வைத்து குடும்பம் நடத்துவதும் என மகிழ்ச்சியாகத்தான் ஆறு மாதகாலம் வாழ்க்கை போனது. ஆனால் ஆறு மாத காலத்தில் குடும்ப வாழ்க்கையில் அந்த மாணவனுக்கு கசப்பு தட்டி விட்டது.

எனவே கல்லூரி மாணவன் அந்த பெண்ணை விட்டுப் பிரிய முடிவு செய்ததோடு, அதனை தொடர்ந்து அந்த மாணவன் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு திருச்சியில் இருப்பதாகவும் தன்னை வந்து அழைத்துச் செல்லும்படியும் கூறியுள்ளார். உடனே மாணவனின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து, அதனைத் தொடர்ந்து போலீசார் திருச்சி சென்று இரண்டு பேரையும் மீட்டுள்ளனர். அதன்பின் அப்பெண்ணின் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து மாணவன் தான் பெற்றோருடன் செல்வதாக கூறி விட்டான். அதன்படி அவனை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் இந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே அதன் காரணமாக அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். ஒரு சிறு வயது கள்ளக்காதலுக்காக கணவன் மற்றும் பிள்ளைகளை உதறித் தள்ளி விட்டு சென்ற பெண்ணை அவர் குடும்பத்தினரும்  தற்போது உதறித் தள்ளி விட்டனர் போலும்.