ஹீரோவாக அவதாரம் எடுக்கும் புகழ்!! யோகி பாபு இடத்தை விரைவில் பிடித்துவிடுவார் என்று புகழாரம்!!

0
31
Fame incarnates as a hero!! Praise that Yogi Babu will take the place soon!!
Fame incarnates as a hero!! Praise that Yogi Babu will take the place soon!!

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் புகழ்!! யோகி பாபு இடத்தை விரைவில் பிடித்துவிடுவார் என்று புகழாரம்!!

இப்பொழுது நகைச்சுவை நடிகாரக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்தான் யோகி பாபு.தனது நகைச்சுவை நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளார்.

தற்பொழுது ஒரு படத்திற்காக யோகி பாபுவை தேர்ந்தெடுத்த பின்னர்தான் கதாநாயகன்,கதாநாயகியை தேர்தேடுகின்றனர் இயக்குனர்கள்.

ஆரம்பத்தில்  சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இப்பொழுது இவர் இல்லாத தமிழ் சினிமா படங்களே இல்லை என்ற அளவிக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்த யோகி பாபு தற்பொழுது கதாநாயகனாக மாறி உள்ளார். அவர் ஹீரோவாக நடித்த மண்டேலா என்னும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தின் மூலம் யோகி பாபுவின் தனித்துவ நடிப்பை ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்ற குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.

அவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கிய நிலையில் தற்பொழுது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

MR.ZOO KEEPER  படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.இந்த படம் தொடர்பான புகைப்படம் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்பொழுது புகழ் தனது சோசியல் மீடியா பக்கத்திலும் இதனை பதிவிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் அவர் ஒரு புலியுடன் இருப்பது போன்று இருக்கின்ற நிலையில் அது நிஜப் புலி என்று படக்குழு கூறியுள்ளது.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படித்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K