பொது இடத்தில் பகிரங்கமாக குடுமிப்பிடி சண்டை! சளைக்காமல் சண்டையிட்ட பள்ளி மாணவிகள்! வைரலான வீடியோ!

Photo of author

By Hasini

பொது இடத்தில் பகிரங்கமாக குடுமிப்பிடி சண்டை! சளைக்காமல் சண்டையிட்ட பள்ளி மாணவிகள்! வைரலான வீடியோ!

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் என பலவும் காலகட்டத்தில் மூடி இருந்த நிலையில், தற்போது ஒரு மாதமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக தான் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பள்ளி மாணவிகள், மாணவர்கள் குறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்து பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் ஏறி பள்ளி மாணவ, மாணவி சாகசம் புரியும் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருந்தது. அதில் மாணவி, ஒருவர் முதலில் ஓடி வந்து ஏற, அதன் பிறகு மாணவனும் அதேபோல் ஏறிய படி இருந்த அந்த வீடியோ வைரலானதன் காரணமாக போலீஸ் உயரதிகாரி அந்த மாணவ, மாணவியை அழைத்து அந்த மாதிரியான செயல்களில் ஈடுபட கூடாதென கண்டித்து அனுப்பினார்.

இந்நிலையில் ஒரு பேருந்து ஓட்டுனரை அடிப்பது போன்ற பல செயல்களிலும் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். அதே போல் பாடம் எடுக்கும் ஆசிரியரையே நல்வழி சொன்ன ஆசிரியரை கை நீட்டி அடித்து உள்ளான். அதே போல் மீண்டும் ஒரு பொது இடம் என்று கூட இல்லாமல் பள்ளி மாணவ மாணவிகள் இவ்வாறு நடந்து கொள்வது குறித்து பெற்றோர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுவும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாணவர்கள் இது போன்ற செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. சென்னை ஆவடி பேருந்து நிலையத்தில்  தற்போது மீண்டும் நடந்த ஒரு சம்பவம் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பது என்று, இது எங்கே போய் முடியும்? என்று மக்கள் கவலை கொள்ளும் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக வெளிவந்துள்ளது.

அந்த பேருந்து நிலையத்தில் பொதுவெளியில் மாணவிகள் பலர் உள்ளனர். அப்போது இரண்டு குழுக்களாகப் பிரிந்த இந்த மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர். இது அங்கிருந்த பொது மக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே பொதுமக்கள் இதில் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். அப்போதும் அவர்கள் சண்டையை நிறுத்தியதாக தெரியவில்லை.

முடியை பிடித்து அடிக்காத குறைதான். அப்படி ஒரு சண்டை அங்கே அரங்கேறியது. அந்த சண்டை எதற்காக என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது. அதன் காரணமாக பலரும் பல கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். தற்போது நடைபெறும் பள்ளிகளில் எந்த மாதிரியான கல்வியை கற்று கொடுக்கிறார்கள் என்ற அச்சமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தைத்தான் கற்றுக் கொடுப்பார்கள். அதன் பிறகுதான் படிப்பு எல்லாம் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய மாணவர்களின் ஒவ்வொரு விஷயங்களையும் பார்க்கும்போது பள்ளிகளில் என்னதான் நடக்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்பும் விதமாக தான் உள்ளது.

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி எந்த மாதிரி குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும் என்பது  அவர்களுடன் இருக்கும் ஆசிரியர்களும், பெற்றோர்களும்தான் அவர்களுக்கு அறிவுரைகளை எடுத்து சொல்ல வேண்டும். நல்ல சிந்தனைகளையும் அவர்களது மனதில் கொண்டு வரவேண்டும். இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து பொதுவெளியில் அநாகரிகமாக மாணவ, மாணவிகள் நடந்து கொள்வது குறையும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.