பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற விஜய் டிவி சீரியல் நடித்த காவ்யா அறிவுமணி தான் ஏன் சின்னத்திரையில் இருந்து வெளியேறினேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
காவியா அறிவுமணி வெற்றி விளக்குவதற்கான காரணம் குறித்து தெரிவித்திருப்பதாவது :-
சாதாரண குடும்பத்தில் பிறந்த சினிமா ஆசை கொண்ட பெண்ணாகத்தான் தன்னுடைய வாழ்வை துவங்கியதாகவும் தன்னுடைய சொந்த ஊரான ஆம்பூரில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்து பல இடங்களில் அலைந்த பொழுது தனக்கு youtube சேனலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதன் பின் 2 வருடங்கள் சென்ற பிறகுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்காக தன்னை அழைத்ததாகவும் அதில் முக்கியமான கதாபாத்திரம் தனது கொடுக்கப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற மேலும் சில சீரியல்கள் தனக்கு வாய்ப்பு தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தன்னுடைய கனவு வெள்ளித்திரைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என்பதால் தொடர்ந்து பல ஆடிஷன்களில் கலந்து கொண்டதாகவும் தற்பொழுது தனக்கு பல பட வாய்ப்புகள் வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கூட இன்னும் பல திரைப்படங்களுக்கான ஆடிஷண்களில் கலந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மிறள், ரிபப்பரி போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய வீட்டில் ஏழ்மை காரணமாக பண தேவை அதிக அளவில் இருந்ததாகவும் தன் தங்கையின் படிப்பிற்கு கூட பணம் இல்லாத நேரத்தில் சீரியல்களில் நடிப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும், குடும்ப வறுமை ஒரு புறம் இருக்க குடும்ப வறுமைக்காக சின்னத்திரையிலேயே இருந்து விடுவோமோ என்ற பயம் தன்னை வாட்டியதாகவும் எது எப்படி இருந்தாலும் தன்னுடைய லட்சியமே முக்கியம் என நினைத்து வெள்ளித்திரைக்கு வந்து விட்டதாகவும் காவியா அறிவு மணி தெரிவித்திருக்கிறார்.