பிரபல நடிகர் தீடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

0
238
Famous actor dies suddenly! The screen world in shock!
Famous actor dies suddenly! The screen world in shock!

பிரபல நடிகர் தீடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக பல முன்னணி நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் உட்பட பலர் இறந்து வரும் தருவாயில் கொரோனா என்னவோ குறைந்த பாடில்லை.

இந்த நிலையில் சமீப காலமாக திரை பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.

அந்த வகையில் மலையாள நடிகரும், வில்லன் நடிகரும் ஆன பி.சி.ஜார்ஜ் அவர்களுக்கு தீடீர் உடல் நல குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இவர் சங்கம், அர்த்தவம், சாணக்கியம், உத்தமன், சிட்டி போலீஸ், மகாநகரம், பரம்பரா, கலிகாலம், கிரைம் பிராஞ்ச் உள்ளிட்ட 65 படங்களில் நடித்து உள்ளார்.

சில முக்கிய கதாபாத்திரங்களிலும், அனைத்து மலையாள முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை பலனின்றி பி.சி.ஜார்ஜ் மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 74.அனைத்து நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடப்பட்டது.

Previous articleபுதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!
Next articleஅரசு வேலை வாங்கித் தருவதாக இரண்டு கோடி ரூபாய் வசூலித்த பாஜக பெண் பிரமுகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here