வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

0
184

விஜய் டிவியின் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நிலை குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூளையில் ரத்தக் கசிவும் உடல்நிலை செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து கொண்டே சென்றதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி  மேல் சிகிச்சைக்கு போதிய வசதியில்லாமல் ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன்பின் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென்று உயிரிழந்தார். இவர்  கோலமாவு கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் உள்ளிட்ட பல ஷோக்களில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் வலம் வந்தவர். இவருடைய இறுதி அஞ்சலிக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று கண்ணீர் மல்கமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இதேபோல் பல பிரபலங்கள் தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Previous articleமாணவர் சேர்க்கை 20 சதவீதம் அதிகரிப்பு ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !!
Next articleசிவப்பு ரோஜாக்கள் பகுதி 2 படப்பிடிப்பு துவங்குமா? ஹீரோ கதாபாத்திரம் யாருக்கு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here