யானை சாணத்தில் போட்ட டீயை சுவைத்து குடிக்கும் பிரபல நடிகர்!

Photo of author

By Parthipan K

யானை சாணத்தில் போட்ட டீயை சுவைத்து குடிக்கும் பிரபல நடிகர்!

Parthipan K

தமிழ் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை தொடர்ந்து பாரத பிரதமர் மோடி என பலர் கலந்துகொண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் செய்தி அனைவரும் அறிந்ததே. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் முதல் டீசர்  வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் இயக்குனர் மட்டுமல்லாமல் தொகுப்பாளருமான  பியர் கிரில்ஸ் அக்ஷய் குமாருக்கு  யானை சாணத்தில் டீ போட்டுக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அக்ஷய்குமார் ரியல் ஹீரோவாக ஏரியை கயிறு கட்டி அந்தரத்தில் நடக்கும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.இந்த வீடியோவிற்கு  கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்குகளை குவிந்துள்ளது. மேலும் நிகழ்ச்சியை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்றும் தங்கள் கண்களில் தெரிவிக்கின்றனர்.