அஜாஷ்கான் என்ற பாலிவுட் நடிகரின் ஜோதேஷவரி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் அவரது வீட்டில் போதைப்பொருள் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
அஜாஸ் கானின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுராஜ் கௌத் என்பவர் ஐரோப்பா நாட்டில் இருந்து 100 கிராம் மெஃபெடிரோன் போதை பொருளை அக்டோபர் 8 ஆம் தேதி அன்று ஆர்டர் செய்துள்ளார்.
இந்த பார்சல் அஜாஸ் கானின் அலுவலகத்தில் டெலிவரி செய்யப்பட்டது. இதுதொடர்ந்து அதிகாரிகள் சுராஜை கைது செய்த பின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் மூலம் அஜாஷ்கான் உடைய மனைவி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதே பாலிவுட் சினிமா துறையை மட்டும் இன்றி பாலிவுட் நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் ஜோதேஷவரி குடியிருப்பில் சோதனை செய்ததில் 130 கிராம் எடை கொண்ட மாரிஜுவானா மட்டும் இதர போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின் அதிகாரிகள் குலிவாலாவை கைது செய்தனர். இதுகுறித்து அவரது கணவனிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்க முயற்சி செய்து வரும் நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.