இருதய நோய் காரணமாக பிரபல நடிகை மரணம்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

Photo of author

By Sakthi

இருதய நோய் காரணமாக பிரபல நடிகை மரணம்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

Sakthi

Updated on:

இருதய நோய் காரணமாக பிரபல நடிகை மரணம்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

இயக்குநராகவும் நடிகையாகவும் இருந்து வந்த ஜெயதேவி அவர்கள் இருதய நோய் காரணமாக உயிரிழந்த செய்தி திரைத்துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

கதையாசிரியர், இயக்குநர், நடிகை என்று பன்முக திறமைகள் கொண்ட நடிகை ஜெய தேவி அவர்கள் நடிகையாக மறைந்த ஜெமினி கணேசன் அவர்களுடன் இதய மலர் தியைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் இதன் பிறகு சாய்நாதாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பின்னர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நலம் நலமறிய ஆவல் திரைப்படத்தை இயக்கி நடிகையாக இருந்த ஜெயதேவி அவர்கள் இயக்குநராகவும் மாறினார்.

அதன் பின்னர் நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல திரைப்படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் தயாரிப்பாளராக பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இதையடுத்து நடிகை ஜெயதேவி அவர்கள் கடந்த கால வாரங்களாகவே இருதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு சென்னை போரூரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபடியே இருதயம் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நடிகை ஜெயதேவி அவர்களின் உடல் மோசமைடந்த நிலையில் இன்று(அக்டோபர்4) அதிகாலை உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் இழப்பாகும். நடிகர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.