நடிகை சமந்தா அவர்கள் நாக சைத்தன்யாவை காதலித்து இருவரின் வீட்டிலும் பெற்றோருடைய அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டனர். இது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
சினிமா துறையிலும் ரசிகர்கள் இடையிலும் சமந்தாவிற்கு இரண்டு காதல் இருந்ததாக பேசப்பட்டு வந்தது. ஒன்று நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட காதல், மற்றொன்று நாக சைதன்யாவுக்கு முன்னர் சமந்தா மற்றும் சித்தார்த் அவர்கள் காதலித்து வந்தனர் என்பதாகும். எனினும் இதன் உண்மை நிலை இன்று வரையில் தெரியவில்லை.
சித்தார்த் மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து வந்தனர் என்றும், சில காலங்களில் சமந்தா அவரை பிரேக் அப் செய்து விட்டார் என்ற செய்தியும் பரவலாக பகிரப்பட்டது. ஆனால் அதன் பிறகு தான் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து தங்களுடைய வாழ்வில் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த சந்தோஷம் நீண்ட நாட்களுக்கு இல்லை. 2022ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
தற்பொழுது நாக சைதன்யா சோபிதா உடன் திருமணம் செய்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். நடிகை சமந்தாவும் சினிமா துறையில் தன்னுடைய வாழ்வை தானாகவே செதுக்கி வருகிறார்.
இந்நிலையில் தான், தற்பொழுது நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய பள்ளி காலத்து முதல் காதலை பற்றி தெரிவித்திருக்கிறார். அவருடைய முதல் காதல் குறித்து அவர் கூறியிருப்பதாவது :-
சமந்தா இடைநிலை வகுப்பில் படித்து கொண்டிருக்கும் போது, தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது ஒரு பையன் இவரை பின் தொடர்வதை வழக்கமாக வைத்திருந்தாராம்.
சுமார் இரண்டு வருடங்கள் அந்த பையன் பின்தொடர்ந்த நிலையில், ஒரு நாள் கூட சமந்தாவிடம் வந்து பேசியது இல்லையாம். ஒருநாள் சமந்தாவே ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறீர்கள் ? எதுவும் பேச மாட்டீங்களா ? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் “யார் சொல்றது நான் உன்னை பிரித்து தொடர்ந்து வருகிறேன் என்று” என கேட்டுள்ளார். இது நடிகை சமந்தா அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுப்பது போல் இருந்ததாம்.
மேலும் இது குறித்து சமந்தா அவர்கள் கூறியது, காரணம் அவரைப் பற்றி மனதில் என்னவெல்லாமோ நினைத்திருந்தாராம். ஆனால் அந்த பையனின் பதில் சமந்தாவுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அவர் தன்னை விரும்பினாரா? இல்லையா? விரும்பி சொல்ல முடியவில்லையா? என்பது அப்போதைக்கு தனக்கு புரியவில்லை என சமந்தா கூறியுள்ளார். அதே போல் அது ஒரு விசித்திரமான அனுபவம் என்றும், அதே போல் அது ஒரு அழகான நினைவாக தன்னுடைய நினைவில் உள்ளது என சமந்தா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.