சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா?

0
82

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா?

தற்போது உள்ள தமிழ் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டாக்டர். இந்த படம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், நல்ல வசூலும் பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராக உள்ளன.

இந்நிலையில் தனது அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயாராகி உள்ளார். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு தமிழில் வெளியான ‘ரங்கூன்’ படத்தை இயக்கியவர் ஆவார். மேலும், இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த தகவலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

சிவகார்த்திகேயனின் இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை குறித்து சாய் பல்லவியிடம் கூறியபோது, கதை சாய் பல்லவிக்கு பிடித்துபோனதாகவும், எனவே இந்த படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்புக்கொண்டு உள்ளார் என சொல்லப்படுகிறது.

தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய் பல்லவி. எனினும், தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்துள்ளார். இந்நிலையில், முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர உள்ளார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K