சைலண்டாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!

0
152

இன்று ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா, நீண்டநாளாக காதலித்த பிரபல நடிகை ஷாலினியை தனது  வீட்டிலேயே சைலண்டாக யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

தமிழ்சினிமாவில் நடிகை ஷாலினி வத்னிகட்டி  நடித்த முதல் படம் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’  அதன்பின் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 

கடைசியாக  இவர் நடிப்பில் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ என்ற படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இயக்குநர் மனோஜ் பீதா – ஷாலினி திருமணம் வீட்டிலேயே எளிமையாக நடைபெற்றது.மனோஜ் பீதா – ஷாலினி திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சினிமா பிரபலங்கள் மனோஜ் பீதா – ஷாலினி தம்பதிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மேலும் அவருடைய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Previous articleமாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அடுத்த சோதனை! எச்சரிக்கும் சீமான்
Next articleகொரோனாவால் அவதிப்படும் இந்நேரத்தில் இப்படியொரு அறிவிப்பா? தடை கேட்டு தமிழக அரசை வலியுறுத்தும் வைகோ