ஷூட்டிங்கிருந்து திடீரென்று வெளியேறிய பிரபல நடிகை!! காரணம் இதுதானா??

Photo of author

By Parthipan K

ஷூட்டிங்கிருந்து திடீரென்று வெளியேறிய பிரபல நடிகை!! காரணம் இதுதானா??

Parthipan K

தமிழ் பிரபல நடிகர்களான அருண் விஜய், விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடிக்கும் ‘அக்னிசிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பிலிருந்து திடீரென்று அந்தப் படத்தின் கதாநாயகியான ஷாலினி பாண்டே விலகியுள்ளார்.

இதைக் கேட்ட படக்குழுவினர் கடுப்பாகி விட்டனர். ஏனென்றால் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படி செய்ததால் படக்குழு அப்செட்டில் உள்ளது.

இந்த படத்தின் உச்சகட்ட ஆச்சரியமாக கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் படம் எனும் பெருமையை அக்னி சிறகுகள் பெற்றுள்ளது மேலும் கண்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்ட விஷுவல் காட்சிகளையும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தளிக்கும் என்ற நிலையில் சினிமா வட்டாரம் காத்துக் கொண்டிருந்த நிலையில் ஹீரோயின் எடுத்த இந்த முடிவால் படப்பிடிப்பு நிறுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நடிகை ஷாலினி பாண்டே இந்த படத்தில் இருந்து விலகுவதற்கு காரணம் என்னவென்றால் பாலிவுட் ரன்பீர் கபூர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் நைசாக நழுவிக் கொண்டார்  என்ற தகவல்கள் வெளியாகிறது

இந்த நிலைமையை உடனடியாக சரி செய்த அந்தப் படத்தின் இயக்குனர், அதிரடியாக ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனை கமிட்டாகி   மறு படப்பிடிப்பு நடத்திவருகிறார்.இந்த செய்தியை கேட்டதும் படக்குழுவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.