சசிகலா கை காட்டும் ஆளே அடுத்த முதல்வர்:?பிரபல ஜோதிடர் கணிப்பு!

Photo of author

By CineDesk

சசிகலா கை காட்டும் ஆளே அடுத்த முதல்வர்:?பிரபல ஜோதிடர் கணிப்பு!

CineDesk

சசிகலாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவரை கைது செய்தனர்.பின்பு அவருக்கு 10கோடி ரூபாய் அபராதமும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது அந்த நான்கு ஆண்டுகாலம்
முடியவிருக்கும் நிலையில் சசிகலா சிறைவாசத்தில் இருந்து வெளிவர இருக்கிறார்.இதற்காக பெங்களூரில் ஜோராக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

ஜெயலலிதா அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போது அவர் ஆட்சியில் உட்கார மாட்டார் மருத்துவமனை, சிறைச்சாலையில் தான் இருப்பார் என்று கணித்து சொன்னவர் பிரபல ஜோதிடர் ஷத்குரு.

இவர் தற்போது சசிகலாவின் கட்டத்தையும் கணித்துள்ளார்.அதில் அவர் கூறியவாறு சசிகலா விடுதலை தமிழக அரசியலில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரது ஜாதக கட்டம் சரியில்லாததால் தான் அவர் கணவர் இறப்பு மற்றும் அவருக்கு சிறைவாசம் எல்லாம் நேர்ந்தது.

இனி அவருக்கு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி அவருக்கு குருபெயர்ச்சி அடுத்ததாக சனிப்பெயர்ச்சி என ஆரம்பிக்க இருக்கின்றது.அன்றுமுதல் சசிகலாவிற்கு வசந்த காலம் என்றே சொல்லலாம்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா கைகாட்டும் ஆட்களே ஆட்சி அதிகாரத்தில் அமர அதிக வாய்ப்பு உள்ளது என்று அடித்துச் சொல்கிறார் பிரபல ஜோதிடர் சத்குரு சாந்தகுமார். மேலும் இவர் மக்கள் செல்வாக்குப் பெற்று தலைவியாக தமிழகத்தில் உலா வருவார் இவரது வருகை அதிமுகவிற்கு சரிவை தரும் என்றும் கணித்துள்ளார்.