சாக்லேட் பாய் மாதவனுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த பிரபல இயக்குனர் கவலைக்கிடம்!! அதிர்ந்த திரையுலகம்!!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மாதவன். இவருக்கு சூப்பர் கொடுத்த பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத் உடல்நிலை குறைவால் கவலைக்கிடமாக உள்ளார்.

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ’ எவனோ ஒருவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹிட் கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவராக அறிமுகமானவர் நிஷிகாந்த் காமத்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் எல்லாம் மெஹா ஹிட் ஆன ‘திரிஷ்யம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை நிஷிகாந்த் காமத் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்த படம் பாபநாசம்  என்று ரீமேக் செய்யப்பட்டு, உலக நாயகன் கமலஹாசன், கௌதமி நடிப்பில் மெகா ஹிட் கொடுத்தது. மேலும் இவர் பாலிவுட்டில் தவிர தென்னிந்திய படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தென்னிந்திய இயக்குனர் என்றே பெரிதும் பேசப்படுவார்.

இவருக்கு அண்மையில் கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் கண்காணிப்பில் உள்ளார்.

அந்த மருத்துவமனையின் தரப்பில் இருந்து அவரது உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.