சென்னையில் தங்கபதக்கம் வென்ற பிரபல கல்லூரி மாணவர்கள் கைது!! வெளியான காரணம் பகீர் தகவல்!!

Photo of author

By Vijay

சென்னையில் தங்கபதக்கம் வென்ற பிரபல கல்லூரி மாணவர்கள் கைது!! வெளியான காரணம் பகீர் தகவல்!!

Vijay

Famous college students who won gold medals in Chennai arrested!! The reason for the release is shared information!!

சென்னையில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது அதில் இன்ஜீனியரிங் பட்டதாரிகள் மற்றும் வேதியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவகள் போதைப்பொருகள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.  இதில் 4 பேர் கல்லூரி மாணவர்களும் மற்றும்  அவர்களுக்கு உதவியாக இருந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமாக போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்கள் குற்றச்சம்பவம் மற்றும் அவர்களது வாழ்க்கை சீரழிவதால் முதல்வர் உத்தரவின்படி போதை பொருட்களை  முற்றிலும் ஒழிக்கும் “போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை” என்று திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீர் சோதனை சென்னை கொடூங்கையூர் பகுதியில் மாணவர்கள் சிலர் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக போலீஸ்க்கு தகவல் வந்ததையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கொடூங்கையூரில் ஒரு வீட்டில் இருந்த 7 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.  அவர்களிடம் இருந்து 250 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதில் கைதான பிரவீன், கிஷோர், தனுஷ், பிளம்மிங் பிரான்சிஸ் உள்ளிட்டோர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் 250 கிராம் எடையுள்ள மெத்தப்பெட்டமைன் எனும் போதைப்பொருளை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அதனை 1 கிராம் 2000 ரூபாய் வீதம் விற்பனை செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வாங்கியது அனைத்தும் போலியானது என வாங்கியவர்கள் கூறியதால் 4 பேரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் அவர்களே மெத்தம்பெட்டமைன் தயாரித்தி அதிக விலைக்கி  விற்பனை செய்யலாம் என்று தயாரிக்கும் முறையை சோதனை செய்த போது அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூண்டோடு அனைவரையும் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட  கிஷோரின் தந்தை கதிரவன் மீஞ்சூர் ஒன்றிய திமுக கவுன்சிலராகவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது