சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் படத்தில் நடிக்கும் பிரபல நகைச்சுவை நடிகர்!! கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!!

Photo of author

By CineDesk

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் படத்தில் நடிக்கும் பிரபல நகைச்சுவை நடிகர்!! கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!!

1970 ஆம் ஆண்டில் ஒற்றை கடையாக தொடங்கப்பட்டது தான் சரவணா ஸ்டோர்ஸ். பின்னர் சில்லறை விற்பனை கடைகளில் சங்க தொடர்பாக பல கிளைகள் கடைகளாக விரிந்த ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவில் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தமான சில்லறை வணிக சங்கிலித்தொடர் கடை ஆகும். பிக் பசாரின் கிஷோர் பியானி கருத்துப்படி இது இந்தியாவின் ஒரு வட்டாரத்தில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் இது சில்லரை விற்பனை நிலையாகும். சரவணா ஸ்டோர்ஸ் 1970 ல் செப்டம்பர் 4 அன்று சென்னை தி நகரில் ஒருபாத்திர கலையாக மட்டும் துவங்கப்பட்டது. இது சிறிது சிறிதாக வளர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்கும் அங்காடி ஆக உருவானது.

மேலும் இந்த கடையின் தற்போது ஓனராக இருக்கும் சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார். தொழிலதிபர் சரவணன் அருள் அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து அண்மையில் இவர் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர் இந்தப் படத்தை இயக்குகின்றனர்.

இவர்களின் இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் விவேக் அவர்கள் முக்கியம் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில் இப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு நடிக்க ஒப்பந்தம் அகி உள்ளார். இவர் நடிகர் விவேக்குக்கு பதிலாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் அதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் யோகி பாபுவை படக்குழு கேக் வெட்டி வரவேற்றனர்.