பிரபல இசையமைப்பாளர் படம் ஓடிடி தளத்தில் வெளியீடு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Rupa

பிரபல இசையமைப்பாளர் படம் ஓடிடி தளத்தில் வெளியீடு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Rupa

Updated on:

Famous composer movie released on ODT site! Shocked fans!

பிரபல இசையமைப்பாளர் படம் ஓடிடி தளத்தில் வெளியீடு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா ஆரம்பித்த முதலே திரையரங்குகளில் அனைத்து படங்களுள் ரிலீஸ் செய்வது இல்லை.பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.மீதமுள்ள படங்கள் தற்போது ஓடிடி யில் ரிலீஸ் ஆகி வருகிறது.அந்தவகையில் சன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் வணக்கம்டா மாப்ள.

இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.ஆனந்தராஜ்,டேனியல்,ரேஷ்மா உள்ளிட்டோர் இதர கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.இப்படம் நகைச்சுவை உள்ள படமாக இருக்கும் என கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி ஜீவி.பிரகாஷுக்கு பெண் தேடுவதையே இப்படம் முழுவதும் காமெடியாக எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.இப்படம் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் சன் டிவியில் வெளியிடுவதாக தெரியவந்தது.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று நாளை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என கூறினர்.நாளை சன் டிவியில் ஒளி பரப்பு செய்துவிட்டு சிறிது நாட்கள் கழித்து சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.தற்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முதலில் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்படும் என கூறியதுக்கு மாறாக முதலில் இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்துவிட்டு அதன்பின் தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளனர்.ரசிகர்கள் அனைவரும் சன்டிவியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர் அந்தவகையில் இது பெரும் ஏமாற்றத்தை தருவதாக உள்ளது.