சன்னி லியோனுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!! இனிமே இவரும் ஃபேமஸ் தான்!!

Photo of author

By CineDesk

சன்னி லியோனுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!! இனிமே இவரும் ஃபேமஸ் தான்!!

கிரிக்கெட் என்பது மட்டையும் பந்தும் கொண்ட ஆடப்படும் ஒரு விளையாட்டு. இது 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிக பிரபலமான விளையாட்டாக உள்ளது. மேலும் கிரிக்கெட் பற்றிய தகவல்களையும் தெரியாத ஆட்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இந்த கால இளைஞர்கள் அனைவருக்கும் கிரிக்கெட் தான் பெரிய சொத்து. மேலும் இந்திய அணிக்காக விளையாடும் பல கிரிக்கெட் வீரர்களை தன் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரராக இருப்பவர் ஸ்ரீசாந்த். இவர் இந்திய அணிக்காக தேர்வு துடுப்பாட்டம், ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு 20 20 ஆகிய வடிவங்களில் விளையாடினார். இவர் வலதுகை வீச்சாளரான இவர் வலதுகை இறுதிக்கட்ட மட்டையாளர் ஆவார். மேலும் இவர் கேரள மாநில கிரிக்கெட் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். அதைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 24 தேர்வு கிரிக்கெட் போட்டிகளிலும், 51 ஒரு நாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து இவர் 2013ஆம் ஆண்டு நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பன்னாட்டு கிரிக்கெட் இவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.

இதை தொடர்ந்து இவர் தற்போது திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளார். இவர் தற்போது பிக் பிக்சர் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஸ்ரீசாந்த் தற்போது புதிய படத்தில் ஒன்று ஒப்பந்தமாகியுள்ளாராம். அந்த படத்தை ராதாகிருஷ்ணன் இயக்க உள்ளாராம். மேலும் அந்தப் படத்தில் ஸ்ரீசாந்த் சிபிஐ அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்துக்கு பட்டா என்றும் பெயர் வைத்துள்ளார்களாம். இந்த நிலையில் ஸ்ரீசாந்த்க்கு ஜோடியாக இப்படத்தில் பிரபல பாலிவுட் முன்னணி நடிகை சன்னி லியோன் நடிக்க உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் சன்னி லியோன் மற்றும் ஸ்ரீசாந்த் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.