விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. காட்டுத் தீயாய் பரவும் போட்டோ!

Photo of author

By Parthipan K

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே.

மேலும் சாதாரண மக்களில் தொடங்கி பிரபலங்கள் வரை பலர் விஜயின்  தீவிர  ரசிகர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் தென்னிந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் தீவிர விஜய் ரசிகரான வருண், தலைவா பட புகைப்படத்தை தன்னுடைய உடம்பில் பச்சை குத்தி உள்ளாராம். அந்த புகைப்படம் கூட சமீபத்தில் வைரலானது.

மேலும் ஆஸ்திரேலிய தொடருக்காக தேர்வான வருண், திடீரென காயம் ஏற்பட்டதால் அந்த தொடரில் இருந்து விலகினார்.

இந்நிலையில் தளபதி விஜய் இன்று கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தியை சந்தித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் விஜயுடன் எடுத்துள்ள புகைப்படத்தை வருண் சக்ரவர்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் அந்த புகைப்படத்தை அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.