நயன்தாராவின் கம் பேக் பற்றி பேசிய பிரபல இயக்குனர்!!

Photo of author

By Gayathri

நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். வாடகைத் தாயின் மூலம் உயிர்,உலக் என்னும் இரு மகன்களுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். சமீபத்தில்
நயன்தாரவின் திருமண வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவர்கள் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுத்த வீடியோவும் அதில் இருந்தது.

நானும் ரவுடிதான் தயாரிப்பாளர் தனுஷ் ஆவார். அவர் இந்த ஆவணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் நயன்தாரா அவர்கள் ஆவண வீடியோவில் மூன்று நிமிடம் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது நடந்தவற்றை பகிர்ந்துள்ளார். இதனால் தனுஷ் அவர்கள் நயன்தாராவின் வீடியோவுக்கு 10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷை விமர்சித்தும், அவரது விவாகரத்துக் குறித்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்டிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது . இந்நிகழ்வு பெரும்பாலும் பகிரப்பட்டது.

பில்லா இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பேட்டி:

பில்லா , ஆரம்பம் போன்ற படங்களில் நயன்தாராவை நடிக்க வைத்த இயக்குனர் தான் விஷ்ணுவர்த்தன் அவர்கள். இவர் தனியார் youtube சேனலில் பேட்டி கொடுக்கும்போது கூறியதாவது, பில்லா படப்பிடிப்பின் போது நயன்தாரா பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார். அவர் மிகவும் தைரியமானவர். எந்நிலையிலும் வேலையிலிருந்து பின்வாங்க மாட்டார். படப்பிடிப்பின் முதலில் அவர் நடிக்க தயங்கிய போது, பிரச்சினைகளை சரி செய்து கம்பேக் கொடுத்திருந்தார். அப்படத்திற்காக உடலையும் மெலித்து, கடும் முயற்சிகளோடு நடித்துக் கொடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து என் அடுத்த படமான ஆரம்பத்திலும் அவர் தைரியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் மட்டுமல்லாது ரியல் லைஃபிலும் அவர் அப்படியே மிக தைரியமானவர். சில பிரச்சனைகள் காரணமாக கெரியர் பிரேக் எடுத்திருந்தாலும் தரமான கம் பேக் கொடுத்து இருப்பார்.

ஒற்றுமை:

ரியல் லைஃபில் அவருக்கும், எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவ்வளவு சீக்கிரத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டோம். எங்கள் பணிகளிலும் வெறித்தனமாக செயல்படுவோம் என்றார் அவர்.