மாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

0
164

லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் முதலில் ஒரு வங்கியில் பணி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு சில  வெப் சீரியஸில் இயக்குனராக பணியாற்றி விட்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். ஏனெனில் இவ்விரண்டு படங்களின் கதைக்களமும் இயக்கமும் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மாஸ்டர். வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் படத்தை ஏற்கனவே பார்த்த தளபதி விஜய் இயக்குனரை  அதிக அளவில்பாராட்டி விட்டாராம்.

தற்போது லோகேஷ் கனகராஜ்க்கு தொடர்ந்து தமிழ்,தெலுங்கு என அனைத்து மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வாறு இருக்க தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடப்போவதாக லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து பிரபல இளம் இயக்குனர் ஒருவர் அவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.

மாஸ்டர் படத்தின் இணை எழுத்தாளராக பணியாற்றியவர் இயக்குனர் ரத்தினகுமார். இவர் அமலாபால் நடித்த ஆடை படத்தின் இயக்குனர் ஆவார்.  லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பின் போது இவர் மீம் வெளியிட்டு மாஸ்டர் படத்தின் அப்டேட் எப்போது என்று கிண்டலடித்து கேட்டுள்ளார். இதனை ரசித்த ரசிகர்கள் ரீட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Previous articleகாட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி !!
Next articleஇந்த தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!