நீட் தேர்வுகளுக்கு எதிராக பலரும் இருந்த நிலையில், தற்போது சூரியாவின் கருத்து பெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது . தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டதனை எதிர்த்து நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். சூர்யாவின் இந்த கருத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் , சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், அந்த கடிதத்தில் உயிருக்கு பயந்து காணொளி வாயிலாக விசாரணை நடத்துவதாக சூர்யா குறிப்பிடுவது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைப்பதாகும் என்றும், மாண்பை குறைத்து மதிப்பிடுவதாகும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ,இது குறித்து பேசிய ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சுந்தரம் அவர்கள் ,நீட் தேர்வு பற்றி சூர்யா கோபத்தில் பேசிய அறிக்கையை ,அவரது கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்து விடலாம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சூர்யாவின் கருதிற்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு அளித்துள்ளார். சூர்யா எப்போதும் தவறாக நடிக்கவும் மாட்டார் ,என்றும் தவறாக பேசவும் மாட்டார் என்று பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை தவிர்க்கவே புதியதாக தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.