பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

Photo of author

By CineDesk

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய்க்கு மருத்துவ வைத்தியம் பார்த்து வருவார். ஆனால் நிஜ வாழ்விலும் 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு ஒரு மருத்துவர் மருத்துவம் செய்து வருகின்றார். இந்த காலகட்டத்தில் தலைவலி என்று மருத்துவரிடம் சென்றாலே பல ஆயிரத்திற்கு மருந்துகளை எழுதித் தரும் மருத்துவர்கள் மத்தியில், 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் தான் கோபால்.

சென்னை வண்ணாரப்பேட்டை, பாலு தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி இவரது பூர்வீகம். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இவரது மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

மேலும் இவர் 1969 ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றினை வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார். தொடக்கத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கிய அவர் தற்போது 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார். தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக அர்பணித்த  77 வயதான மருத்துவர் கோபால் இன்று அதிகாலை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.