பிரபல சினிமா இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை!! தொடரும் மர்மங்கள்!!

Photo of author

By Vinoth

கன்னட இயக்குநர் குருபிரசாத் (வயது 52) 2006ம் ஆண்டில் மாதா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரின் ‘எட்டேலு மஞ்சுநாதா’ திரைப்படம் 2009ம் ஆண்டின் கர்நாடக மாநில திரைப்படம் விருதினைப் பெற்றது. மேலும் 2024-ம் ஆண்டில் வெளியான ரங்கநாயகா படம் பெரும் சரிவை வசூலில் கண்டது. அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் பங்குப்பெற்றார். அவர் மதநாயக்கனஹள்ளியில் உள்ள ஓரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தர்.

மேலும் அவர் முதல் மனைவி விவாகரத்து செய்து விட்டு தற்போது இரண்டாம் திருமணம் சுமித்ரா என்ற பெண்ணை மணமுடித்து கொண்டார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் விசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் காவல் துறையினர் அவரது வீட்டை சோதனை செய்தப்போது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பெங்களூர் அரசு மருத்துவமனைக்கி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரங்கநாயகா படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நிதிச் சுமை, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் முதல் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அவர்  இழப்புக்கு கன்னட திரைவுலகினார் இரங்கலை தெரிவித்து  வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை பெங்களூரில் ஏற்படுத்தியுள்ளது.