பிரபல சின்னத்திரை நடிகை மரணம்!! இருண்டு போனது சீரியல் உலகம்!!

Photo of author

By CineDesk

பிரபல சின்னத்திரை நடிகை மரணம்!! இருண்டு போனது சீரியல் உலகம்!!

சுரேகா சிக்ரி இந்தியவை சேர்ந்த  திரைப்பட , நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இந்தி நாட்க அரங்குகளின் ஒரு மூத்த நடிகையாவார்.  1978 ஆம் ஆண்டு அரசியல் திரைப்படமான கிசா குர்சி கா என்பதில் அறிமுகமானார், மேலும் பல இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும்  இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் துணைக் கதா பாத்திரங்களில் நடிக்கிறார்.

சிக்ரி தமஸ்  மற்றும் மம்மூ  என்ற திரைப்படங்களில் அவரது கதாப்பாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் 2008 ஆம் ஆண்டில் பாலிகா வாது என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது விருதினைப் பெற்றுத் தந்தது. மேலும்  துணைபாத்திர சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருதையும் பெற்றார். இந்தி நாடக அரங்குகளில் அவரது பங்களிப்புக்காக  சங்கீத நாடக அகாதமி விருது வென்றார். அவரது சமீபத்திய வெளியீடு பத்ஹாய் ஹோ (2018), இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் அவருக்கு மகத்தான அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுத் தந்தது.

மேலும் இந்தியில் படமாக்கப்பட்டு தமிழில் மொழி மாற்றம் செய்தது ராஜ் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான மண் வாசனைத் தொடரில் இவர் முக்கிய பங்கி வகித்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் 2020 ஆம் ஆண்டில் அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது. இவர் படங்களை தவிர மற்ற நிறைய சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த படத்தை விட சீரியலில் தான் சிறந்து விளங்கி ரசிகர்களின் ஆதரவை பெற்ற. இந்த நிலையில் அவர் இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் இந்தி திரை உலகமே பெரும் சோகத்தில் உள்ளது.