பிரபல பாடகர் காலமானார்!! சோகத்தில் ஆழ்ந்த இசையுலகம்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 3 மாதம் ஊரடங்கு காரனமாக கொரோனா பரவல் சிறிது கட்டுக்குள் வந்தது. பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
இதனால் இந்திய உட்பட பல்வேறு நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதிதீவிறமாக பரவி வருகின்றது கோரோன வைரஸின் 2 ஆம் அலை. இந்த 2 ஆம் அலை கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வீரியத்தை கொண்டுள்ளதால் சுகாதரத்துறை மற்றும் மத்திய அரசு தற்போது பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்து உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என மதிய அரசு மற்றும் சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்து வருகின்றாது.
மேலும் இந்த கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்த்துள்ளனர். இந்த வகையில் பிரபலங்களின் மரண செய்திகள் இன்னும் நம்மில் பலரை துக்கத்தில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது கொரோனாவால் உயிரிழந்த பாடகரின் மரண செய்தி வந்துள்ளது. ஆட்டோ கிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்கிற பாடல் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் பாடகர் கோமகன். இந்நிலையில் பிரபல பாடகர் கோமகனுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த செய்தி பாடகர் மோகனின் ரசிகர்களுக்கு பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.