பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை! நடந்தது என்ன?

Photo of author

By Anand

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை! நடந்தது என்ன?

பிரபல நாட்டுப்புற பாடகரும் மற்றும் திரைப்பட பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகளை காணவில்லை என்று சென்னை, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நாட்டுப்புற மற்றும் தமிழிசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமி தொடர்ந்து பல மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வருபவர். கிராமத்து பாடல்களை பாடி பெரும்பாலான மக்களின் மனதை கவர்ந்த அவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றிருப்பவர். சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இரண்டாவது மகள் மேகா. 
 

family


இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளான பல்லவியை நேற்று ஞாயிற்று கிழமை 8 மணி முதல் காணவில்லை என உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளனர்.

அந்த புகாரில் மூத்த மகள் பல்லவிக்கும், இரண்டாவது மகள் மேகாவுக்கும் இடையே சிறிய சண்டை ஏற்பட்டது. அதனால் பல்லவி கோபித்து கொண்டு காரை எடுத்து வெளியே சென்றுவிட்டாள் என்று கூறியுள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி கட்சிகளை வைத்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது பல்லவியின் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் “Guys some random fake news is spreading that I’ve been kidnapped or lost or something… I’m absolutely fine.. Do NOT believe such fake stuff!” என்று அதில் இடம் பெற்றுள்ளது.

அதாவது, “நண்பர்களே, நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போய் விட்டதாகவோ கூறி சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். போலியான செய்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவின் காரணமாக, பல்லவி காணாமல் போய் விட்டாரா அல்லது பத்திரமாக இருக்கிறாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது இதுவரை புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினர் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் சொல்வதே உண்மையாக இருக்க முடியும் என்பதால் மக்கள் அவர்களின் விளக்கத்துக்காக காத்துள்ளனர்.